டெங்கு விழிப்புணர்வு முகாம்: பொதுமக்கள் ஒத்துழைத்தால் டெங்கு காய்ச்சலை விரட்டலாம் மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தல்
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கலாம் என காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் கொசு மற்றும் பூச்சியல் நோய்தடுப்பு தொழில் நுட்ப உதவியாளர் சேகர் தலைமையில், ஊழியர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று, டெங்கு கொசுக்களை உருவாக்கும் புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
மேலும், குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உள்ளதா என கண்டறிந்து அதனையும் அழித்து வருகின்றனர். தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் இருப்பதில் மக்கள் அக்கறை காட்டவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பெரியபேட், திருநகர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் பேசியதாவது:-
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகலில் பலரை, பலமுறை கடிக்கும். டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடும், சுகாதாரத்தோடும் இருக்க வேண்டும். குறிப்பாக, வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் உள்ளவர்களை கடிக்கும் கொசுவாலும் டெங்கு பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், பூச்சியல் ஆய்வாளர் ரெங்கநாயகி, யானைக்கால் ஆய்வாளர் யோகேஸ்வரி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story