மின்வாரிய காலி பணியிடங்களில் ஐ.டி.ஐ. படித்தவர்களை நியமிக்க வலியுறுத்தல்


மின்வாரிய காலி பணியிடங்களில் ஐ.டி.ஐ. படித்தவர்களை நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 3:42 PM GMT)

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஐ.டி.ஐ. படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை,

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் சிவகங்கை மின்பகிர்மான வட்ட பொதுக் குழுக்கூட்டம் வட்ட தலைவர் இருதயராஜ் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். வட்ட செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித் தார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர் சுப்பிரமணியன், உப தலைவர் சங்கையா, மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:- காரைக்குடி நகர் மற்றும் தெற்கு பகுதியிலும் புதுவயல், சிவகங்கை நகர் பிரிவு ஆகியவைகளில் மின் இணைப்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த பிரிவு அலுவலகங்களை 2-ஆக பிரிக்க வேண்டும்.

ஐ.டி.ஐ. படித்தவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மின் வாரியத்தில் உள்ள காலியிடங்களில் பணியமர்த்திட வேண்டும். பிரிவு அலுவலகங்களில் உள்ள முதல்நிலை முகவர் பதவியை சிறப்பு நிலை முகவராக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் உப மின்நிலையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் மற்றும் தண்ணீர் தூக்கிவருபவர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கோட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Next Story