மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது + "||" + The civil servants' protest was held in Naga in order to assert their demands

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மோகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.


முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் முன்னாள் மாநில துணைத்தலைவர், அரசு மருந்தாளுனர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் 4 செவிலியர் உள்ளிட்ட 5 பேரின் தற்காலிக பணி நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேரின் மாவட்ட மாறுதலை திரும்ப பெற வேண்டும். அரசு பணியாளர்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கையில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சீர்காழி வட்ட செயலாளர் கலைச்செல்வன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜோதிமணி, ஓய்வூதியர் சங்க தலைவர் குணசேகரன், நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
2. மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...