மாவட்ட செய்திகள்

உணவுப்பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 53 மனுக்கள் பெறப்பட்டது + "||" + 53 petitions received by the Public Complaint Campaign on Food Supply

உணவுப்பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 53 மனுக்கள் பெறப்பட்டது

உணவுப்பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 53 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவின் உத்தரவின்படி, சிறுவாச்சூர் கிராமத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவின் உத்தரவின்படி, சிறுவாச்சூர் கிராமத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கான உதவி கலெக்டர் சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விஜயன் ஆகியோர் தலைமையில் நடந்தது. முகாமில் உணவுப்பொருள் பெறுவதற்கான “ஸ்மார்ட்“ குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 53 மனுக்கள் பெறப்பட்டு, 47 மனுக்கள் ஏற்கப்பட்டது. 6 மனுக்கள் கூடுதல் ஆவணங்கள் கேட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட குடும்பத்தலைவி ஒருவர் தனக்கு ரே‌‌ஷன் கடையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்ததால், உடனடியாக அவரது கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அவருடைய பெயர், அவரது கணவர் பெயருக்கு பதிலாக நீக்கம் செய்யப்பட்டு இருந்ததை யொட்டி அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது கணவர் பெயர் நீக்கி உடனடியாக பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒரு குடும்ப தலைவிக்கு தனது மகன் அகால மரணமடைந்து விட்டதால் அவர் பெயரை நீக்குமாறு மனு அளித்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வம், கிராம நிர்வாக அதிகாரிகள் சுரே‌‌ஷ், தவமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
2. அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
3. மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மனு
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
4. மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் 209 மனுக்கள் குவிந்தன
நாமக்கல் மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 209 மனுக்கள் பெறப்பட்டன.
5. ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...