திருச்சி மத்திய சிறையில் கைதிகள் 5 பேர் திடீர் உண்ணாவிரதம்


திருச்சி மத்திய சிறையில் கைதிகள் 5 பேர் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 13 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் 5 பேர் திடீர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கே.கே.நகர்,

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளான கார்த்திக், திருச்செல்வம், முனுசாமி ஆகிய 3 பேருக்கும், சிறை வார்டர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மோதல் ஏற்பட்டது.

அப்போது சிறை வார்டரை கைதிகள் 3 பேரும் தாக்கியதாக கூறி கே.கே.நகர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, சிறை வார்டர்கள் சிலர் சேர்ந்து அந்த கைதிகள் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரதம்

இதை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வார்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தண்டனை கைதிகள் 3 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியை சேர்ந்த செல்வம், முகிலன், யுவராஜ், நூர்தீன், லோடு முருகன் ஆகிய 5 பேரும் சிறைக்குள் நேற்று திடீரென ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். 

Next Story