மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டியில் பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை + "||" + In Vikravandi Woman commit suicide by fire What is the reason? Police are investigating

விக்கிரவாண்டியில் பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 32). சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுஜிதா(28) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுஜிதா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுஜிதா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து சுஜிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. கிரிக்கெட் விளையாட்டில் தகராறு; பெண் அடித்துக்கொலை கணவன்-மனைவி-மகன் மீது வழக்கு
பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. பெரம்பலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை
பெரம்பலூர் அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5. பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம் அடைந்தார்.