பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி போராட்டம்: நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
இந்தி நடிகர் சல்மான்கான் 13-வது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் வசிக்கிறார்கள். போட்டியாளர்களான ஆண், பெண் இரு தரப்பினருக்கும் ஒரே படுக்கை பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்னி சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட பலர் நேற்று முன்தினம் மும்பை பாந்திராவில் வசிக்கும் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் குவிந்தனர்.
அப்போது அவர்கள், சல்மான்கானுக்கு எதிராக கோஷம் எழுப்பி நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அநாகரிக கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்திய 20 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து மாலையில் விடுவித்தனர்.
இதற்கிடையே நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றார்.
நடிகர் சல்மான் கானுக்கு எதிராக நடந்த போராட்டமும், அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story