மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் 209 மனுக்கள் குவிந்தன


மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் 209 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 13 Oct 2019 10:00 PM GMT (Updated: 13 Oct 2019 2:39 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 209 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல்,

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ஒரு தாலுகாவுக்கு ஒரு ரேஷன்கடை தேர்வு செய்யப்பட்டு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாமக்கல் தாலுகாவில் கதிராநல்லூரில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சந்திரமாதவன் தலைமை தாங்கினார்.

இதில் 57 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்பட்டது.

209 மனுக்கள்

இதேபோல் சேந்தமங்கலம் தாலுகாவில் ஆண்டவர்நகர் ரேஷன் கடையிலும், ராசிபுரம் தாலுகாவில் அக்கரைப்பட்டி ரேஷன் கடையிலும், கொல்லிமலை தாலுகாவில் சோளக்காடு ரேஷன் கடையிலும், மோகனூர் தாலுகாவில் கீழ்பாலப்பட்டி ரேஷன் கடையிலும், திருச்செங்கோடு தாலுகாவில் புதுப்புளியம்பட்டி ரேஷன் கடையிலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றன.

மேலும் குமாரபாளையம் தாலுகாவில் எலந்தக்குட்டை ரேஷன் கடையிலும், பரமத்திவேலூர் தாலுகாவில் ஓவியம்பாளையம் ரேஷன் கடையிலும் நேற்று குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 209 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story