26 தாசில்தார்கள் இட மாற்றம்


26 தாசில்தார்கள் இட மாற்றம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 6:49 PM GMT)

மாவட்டத்தில் பணியில் இருந்த 26 தாசில்தார்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அறிவித்தார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் பணிபுரியும் 26 தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- சிவகங்கை தாசில்தாராக பணிபுரிந்த கண்ணன், தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலை தனிதாசில்தாராக பணிபுரிந்த மைலாவதி சிவகங்கை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ், இளையான்குடி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

ஏற்கனவே அங்கு பணிபுரிந்த பாலகுரு, தேவகோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை குடிமைப்பொருள் தனிதாசில்தாராக பணிபுரிந்த பஞ்சாபகேசன், மானாமதுரை தாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை குடிமைப்பொருள் தனிதாசில்தாரான யாஸ்மின் சகர்பான், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். தேவகோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணிபுரிந்த மூர்த்தி, திருப்புவனம் தாசில்தாராக மாற்றப்பட்டார்.

ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ராஜா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். காரைக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, திருப்பத்தூர் தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த தங்கமணி, காரைக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த ராஜரத்தினம், சிவகங்கை கலெக்டர் அலுவலக அகதிகள் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த மகேந்திரன், திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்த தர்மலிங்கம், சிவகங்கை குடிமைப் பொருள் தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் செந்தில்வேலு, இளையான்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த திருநாவுக்கரசு, சிவகங்கை நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயந்தி, அரசு கேபிள் டிவி நிறுவன உதவி மேலாளராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கிருந்த காசி சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாராக மாற்றப்பட்டார்.

சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாராக இருந்த ஆனந்த் சிவகங்கை கோட்ட ஆய அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த சேகர் திருப்பத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். திருப்பத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த தனலட்சுமி, திருப்புவனம் சுற்றுசாலை தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு இருந்த வேணு, மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த முத்துராஜ் என்ற முருகன், விருதுநகரில் உள்ள முத்திரைத் தாள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

தேவகோட்டை ஆய அலுவலராக இருந்த சந்தானலட்சுமி, சிவகங்கை ஆய மேற்பார்வை அலுவலராக மாற்றப்பட்டார், ஏற்கனவே அங்கிருந்த மங்கையர்திலகம், தேவகோட்டை ஆய அலுவலராக மாற்றப்பட்டார். விருதுநகரில் உள்ள முத்திரைத் தாள் தனி தாசில்தாராக பணிபுரிந்த கண்ணதாசன், சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு பிரிவு தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி தாசில்தாராக பணிபுரிந்த கந்தசாமி, சிவகங்கை கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

Next Story