ஆரணியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு


ஆரணியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 14 Oct 2019 3:45 AM IST (Updated: 14 Oct 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணி, அருணகிரிசத்திரம் பாட்சா தெருவில் கில்லா தண்டுமாரியம்மன் கோவில், கில்லா விநாயகர் கோவில் உள்ளது. இந்த 2 கோவில்களை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர்.

அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கடைகளுக்கு செல்லும் முன்பு கில்லா தண்டுமாரியம்மன் கோவிலில் வணங்கிவிட்டு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை அவர்கள் வந்தபோது கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அருகில் உள்ள கோவில் நிர்வாகி கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரும், அவரது நண்பர்களும் கோவிலை வந்து பார்த்தனர். அப்போது அருகில் உள்ள கில்லா விநாயகர் கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கோவில்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் உண்டியல் உடைப்பு சம்பவங்களில் பழைய குற்றவாளிகள் விவரங்களை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே கோவிலில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உண்டியல் உடைப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story