மாவட்ட செய்திகள்

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் + "||" + The people of the village protest against the demand of the government as Devendra clan worker

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி செஞ்சேரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

பள்ளர், தேவேந்திர குலத்தான், மூப்பன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, ‘தேவேந்திர குல வேளாளர்‘ என மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராம மக்கள் கையில் கருப்பு கொடியேந்தி நேற்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த கோபால், ரஞ்சித், பிரபு, சதீஷ், பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.


வீடுகளில் கருப்பு கொடி பறக்க விடப்பட்டது

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். பட்டியலினத்தவர் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கிராம பொதுமக்கள், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, புதிய தமிழகம் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்தின் நுழைவு வாயில் கருப்பு கொடிகளை கட்டி தொங்க விட்டிருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி செஞ்சேரி கிராமத்தில் உள்ள வீடுகளிலும் கருப்பு கொடி பறக்க விடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. ஆலங்குடி அருகே சோக சம்பவம்: சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதி கிராம மக்கள் அஞ்சலி
ஆலங்குடி அருகே சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதிக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
3. 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் பணிமனை அருகே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
5. தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.