‘முதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன்’ - ஆதித்ய தாக்கரே பேட்டி


‘முதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன்’ - ஆதித்ய தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன் என சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை, 

சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவசேனா சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை போலவே தான் நானும் உணருகிறேன். வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. எனது தாத்தா (பால்தாக்கரே) வேட்பாளர்களுடன் தேர்தல் பணி ஆற்றுவார். எனது தந்தையும் செய்து வருகிறார்.

எனக்கு மக்கள் மன்ற பணிகளில் ஆர்வம் இருந்தது. எனவே தான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.

சிந்துதுர்க் மாவட்டத்தில் பா.ஜனதா, சிவசேனா போட்டியிடுவது முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிசும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து எடுத்த முடிவு தான்.

மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆக 100 சதவீதம் தயாராக உள்ளேன். ஆனால் அதற்காக நான் தற்போது கனவு கண்டு கொண்டு இருக்கவில்லை. அதற்கான காலம் வரும்போது அது நடக்கும். ஏணியில் ஏறி செல்லாமல் முதல் மாடிக்கு நேரடியாக செல்ல முடியாது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story