சத்தி, கொடுமுடியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தி, கொடுமுடியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஸ்டாலின் சிவக்குமார், ராமசாமி, நடராஜ், முருகன், சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கொடுமுடி ஒன்றிய தலைவர் வீரக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். 10-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். உரிய வேலை உபகரணங்கள் வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் விஜயராகவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story