சகதியான சாலையில் நாற்று நடும் போராட்டம் வியாபாரிகள், பொதுமக்கள் நடத்தினர்


சகதியான சாலையில் நாற்று நடும் போராட்டம் வியாபாரிகள், பொதுமக்கள் நடத்தினர்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 7:39 PM GMT)

சகதியாக மாறிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி 15-வது வார்டு தாராநல்லூர் ஆறுமுகம் தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் சாலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த சாலை தொடர்ந்து ெபய்த மழையினால் தண்ணீர் தேங்கி சகதியாக மாறியது.

இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் அந்த சாலையில் நடமாட முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் பீதியும் பரவியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் சகதியாக மாறிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையை சீரமைக்க அதிகாரிகள் இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், ஆதார் அட்டையை ஒப்படைக்க இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story