கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 7:49 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை சார்பில் குன்னம், வேப்பூர் பஸ் நிலையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை சார்பில் குன்னம், வேப்பூர் பஸ் நிலையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கலைசெல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். முதியோர் மற்றும் விதவைகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story