பின்னிப்பிணைந்து ஆட்டம் போட்ட பாம்புகள்


பின்னிப்பிணைந்து ஆட்டம் போட்ட பாம்புகள்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 7:52 PM GMT)

8 அடி நீளமுள்ள நல்லபாம்பும், சாரை பாம்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து ஆட்டம் போட்டது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் இலுப்படியான் கோவில் அருகில் நேற்று 8 அடி நீளமுள்ள நல்லபாம்பும், சாரை பாம்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து ஆட்டம் போட்டது. அப்போது 2 பாம்புகளும் ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொண்டு சுமார் 3 அடி உயரம் வரை 2 பாம்புகளும் தலையை தூக்கி ஆட்டம் போட்டது. இந்த பாம்புகளின் ஆனந்த நடனம் குறித்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. அந்த பகுதியில் இருந்த பலர் வந்து இந்த அரிய காட்சியை பார்த்து, மெய்சிலிர்த்து ரசித்தனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த ஆனந்த நடனம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் பொதுமக்களின் சத்தங்களை கேட்டு அந்த பாம்புகள் இரண்டும் அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.

Next Story