மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 445 மனுக்களை பெற்றுக்கொண்டு, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் 14 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story