சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Oct 2019 3:45 AM IST (Updated: 15 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தையாக்குப்பம் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந் தார். அப்போது குறுக்கே திடீரென பன்றி ஒன்று வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக நடராஜன் அந்த பன்றி மீது மோதினார். இந்த விபத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story