மாவட்ட செய்திகள்

முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு + "||" + In the Musiri Panchayat Petition to collector to solve drinking water problem

முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு

முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு
முசிறி ஊராட்சி காட்டுப்பாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று கலெக்டர் மெகராஜிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

காட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஆபரேட்டரிடம் கேட்டபோது அவர் விரைவில் வந்து விடும் என்றார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் காவிரி குடிநீர் வரவில்லை.

இதற்கிடையே ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார் பழுதானதால், கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கும், ஏளூர் ஊராட்சி பெருமாகவுண்டம்பட்டிக்கும் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம்.

எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டம் - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி நகராட்சி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
3. கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் பெண்கள் மனு
கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
4. இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
5. அம்மா உணவகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; கலெக்டரிடம் மனு
மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்த வசதியாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.