மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 9:12 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

கன்னங்குறிச்சி, 

சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகே மிட்டா அய்யம்பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் இணைந்து இன்று(நேற்று) முதல் அடுத்த மாதம்(நவம்பர்) 12-ந் தேதி வரை மாவட்டத்தில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 650 கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

கால்நடைகளுக்கு அந்தந்த ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தக பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகின்றது. இந்த பணியினை மேற்கொள்ளும் வகையில் 150 குழுக்கள் மூலம் ஏற்கனவே கோமாரி நோய் தடுப்பூசி குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. எனவே கால்நடை வளர்ப்போர் முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன், உதவி இயக்குனர் ராஜா, கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story