குப்பை கழிவுகளை குவித்து வைத்த கோழிப்பண்ணை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


குப்பை கழிவுகளை குவித்து வைத்த கோழிப்பண்ணை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

தாழக்குடி அருகே குப்பை கழிவுகளை குவித்து வைத்த கோழிப்பண்ணை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

தாழக்குடி அருகே சீதப்பால் மெயின்ரோடு அருகே தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இதனையொட்டி கோழிக்கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற கோழி பண்ணை உரிமையாளர்ஆன்றோநடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

அதே சமயத்தில், குப்பையில் பாதியை எரிப்பதாகவும், மீதியை அப்படியே விட்டு விடுவதாகவும் ஏராளமான புகார்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சென்றுள்ளது.இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் யோகாஸ்ரீ, சுகாதார ஆய்வாளர் அய்யா குட்டி மற்றும் பணியாளர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அபராதம்

அதில், குப்பைக் கழிவுகள் குவிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் கோழிப்பண்னை உரிமையாளர் ஆன்றோவிடம் விசாரணை நடத்தினர்.

மேலும்குப்பைகளை குவித்து வைத்து அலட்சியமாக செயல்பட்டதால் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை அதிகாரி யோகாஸ்ரீ விதித்தார். மேலும் 3 நாட்களுக்குள் குப்பைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

Next Story