மாவட்ட செய்திகள்

கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் + "||" + Government buses that do not run to the train station after ordered by the Collector

கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,

கடந்த மாதம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை போக்குவரத்து ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் வலியுறுத்தியதன் பேரில் ரெயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்குமாறு கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டார். போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகள் பஸ்கள் இயக்கப்படுவதாக தவறான தகவலை தெரிவித்த நிலையில் கலெக்டர் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து பஸ்களை இயக்கி அறிக்கை சமர்பிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனாலும் இதுவரை ரெயில் நிலையத்திற்கு உரிய எண்ணிக்கையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாத நிலை நீடிக்கிறது.


இதனால் ரெயில் நிலையத்திற்கு நெடுந்தூரத்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் ரெயிலில் வந்து இறங்கும் பயணிகள் விருதுநகர் பஸ் நிலையத்திற்கு வருவதற்கும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. தற்போது ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் காரியாபட்டியில் இருந்து வரும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்கு ரெயில்வே பீடர் ரோடு வழியாக வரும் நிலையில் இந்த பஸ்களை ரெயில் நிலையத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யலாம். இதே போன்று திருமங்கலம் செல்லும் பஸ்களும் ரெயில் நிலையத்திற்கு சென்று அதன் பின்னர் திருமங்கலம் செல்ல ஏற்பாடு செய்யலாம்.

தனியாக ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் ரெயில் நிலையத்தை ஒட்டி செல்லும் பஸ்களை ரெயில் நிலையத்திற்கு சென்று செல்ல ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட படி ரெயில் நிலையத்திற்கு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கலெக்டரிடம் பஸ்களை இயக்குவதாக தெரிவித்தாலும் அதன் பின்னர் பாராமுகமகவே உள்ளனர்.

எனவே இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் ஊரடங்கு பெருமளவில் தளர்வு: ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க் கிழமை) ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதாக எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதன் மூலம் கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளது.
2. விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது விதியை மீறிய டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி உத்தரவிட்டார்.
3. சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
4. உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் 7 கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும், 7 கடைகளை மூடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
5. கர்நாடகாவில் இருந்து 400 தொழிலாளர்கள் கொல்லிமலை திரும்பினர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுரை
கர்நாடகாவில் இருந்து திரும்பிய கொல்லிமலை தொழிலாளர்கள் 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற பிறகும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுரை வழங்கினார்.