கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பெரியமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவி. இவரது மகள் லோகேஸ்வரிக்கும், உறவுக்காரரான எளாவூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அன்பு (வயது 27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் எளாவூரில் வசித்து வந்தனர்.
திருமணமானதில் இருந்து அன்புக்கும், லோகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் லோகேஸ்வரி தனது தாய் வீடான நரசிங்கபுரம் பெரியமேடு கிராமத்திற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த லோகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். லோகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண் லோகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story