மாவட்ட செய்திகள்

20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Drinking Water Board employees protest demanding 20% bonus

20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 20 சதவீத போனஸ் வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட கோட்ட அலுவலகம் எதிரில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், துணை செயலாளர் விஜயன், செயற்குழு மணிசேகர், விட்டல்தாஸ் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், தர்மபுரி மாவட்ட செயலாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. தலைவர் நஞ்சுண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறுவோர் டெண்டரை ரத்து செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியம், வங்கி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும்.

20 சதவீத போனஸ்

நடப்பு ஆண்டிற்கு ஒப்பந்த ஊழியர் உட்பட அனைவருக்கும் உச்ச வரம்புகளை தளர்த்தி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட ஆய்வக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

முடிவில், சங்க பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.