காமராஜ் நகர் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 4 இடங்களில் பேசுகிறார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவையில் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் தென்றல் நகர் ஆட்டோ ஸ்டாண்டு- புறாகுளம் சந்திப்பு, ரெயின்போ நகர்-பிரெஞ்சு கார்னர் சந்திப்பு, கிருஷ்ணா நகர்-முதல் குறுக்கு தெரு சந்திப்பு, சாமிப்பிள்ளைதோட்டம்-காமராஜர் மணிமண்டபம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதிவாரியாக எந்தெந்த பகுதிகளில் யார்யார் வரவேற்பது? என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பில் நமது கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்கிறார்கள். எனவே கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story