தேனி, பூ வியாபாரி வீட்டில் மிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி


தேனி, பூ வியாபாரி வீட்டில் மிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 16 Oct 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

பூ வியாபாரி வீட்டில் மிக்சி ஜாருக்குள் பாம்பு குட்டி பதுங்கி இருந்தது.

தேனி,

தேனி பாரஸ்ட்ரோடு 5–வது தெருவை சேர்ந்தவர் முருகன். பூ வியாபாரி. இவருடைய மனைவி செல்வி. இவர் தனது வீட்டில் நேற்று காலையில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது சமையல் அறைக்குள் இருந்து பாம்பு சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சமையல் அறைக்குள் சென்று பார்த்தனர். ஆனால், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் முருகன், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு அங்கு விரைந்து வந்து சமையல் அறையில் தேடிப் பார்த்தார்.

அப்போது பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சத்தம் வந்ததால் பாத்திரங்களை விலக்கிப் பார்த்தார். அங்கு ஒரு மிக்சி ‘ஜார்’ பாதி திறந்த நிலையில் இருந்தது. அதற்குள், ஒரு நல்ல பாம்பு குட்டி பதுங்கி இருந்தது. உடனே அந்த பாம்பு குட்டியை கண்ணன் பிடித்தார்.

அது, சுமார் 2 வார பாம்பு குட்டி ஆகும். பின்னர் அவர், அதை வீரப்ப அய்யனார் கோவில் மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டார். வீட்டின் சமையல் அறைக்கு வெளியே அழகுக்காக வளர்க்கப்படும் கொடி படர்ந்துள்ளது. அந்த கொடி வழியாக பாம்பு குட்டி சமையல் அறைக்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story