தண்டலையில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தண்டலையில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தண்டலை ஊராட்சியில் கால்நடைப்பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கால்நடை வளர்ப்போர் களுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்நடைப்பராமரிப்புத்துறை சார்பில் கோமாரிநோய் தடுப்பூசி முகாமானது தொடங்கப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி வரை கிராம வாரியாக நடைபெறும்.
பொருளாதார இழப்பு
கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயை கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்குரிய தடுப்பூசி மருந்தினை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கோமாரி தடுப்பூசிப்பணிகள் 3 மாதத்திற்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினைப்பசுக்கள், கறவைப்பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கும் தவறாமல் தடுப்பூசியினை போட்டு கொண்டு நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தனபாலன், உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயராஜ், உதவி இயக்குனர்கள் விஜயகுமார், திருமூர்த்தி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story