பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை


பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 7:26 PM GMT)

பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என தஞ்சைரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை, திருச்சி, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சி ரெயில்வே கோட்டம். இதில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் வரும் ஏ கிரேடு நிலையமாக தஞ்சை ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. தஞ்சை ரெயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ளன.

திருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி ரெயில் நிலையத்தில் 1 இடத்தில் தான் நகரும் படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மோப்பநாய் சோதனை

இதே போல் தஞ்சை ரெயில்வே போலீஸ் நிலையமும் திருச்சியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. போலீசாரும் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் அவ்வப்போது மோப்பநாய் உதவியுடன் சென்று சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று தஞ்சையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் டான் உதவியுடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது ரெயில்களில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு போதைப்பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து ரெயில்வே பிளாட்பாரங்கள், பார்சல் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story