குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அதிகபட்சமாக கொட்டாரத்தில் 127 மில்லி மீட்டர் பதிவு


குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அதிகபட்சமாக கொட்டாரத்தில் 127 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 3:44 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொட்டாரத்தில் அதிகபட்சமாக 127 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மலையோரம் மற்றும் அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

கொட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விடாது பெய்ததால் அங்கு அதிகபட்சமாக 127 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்

பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, குழித்துறை, இரணியல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக சுசீந்திரம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை அளவு

மேலும் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 13.6, சிற்றார் 1- 27.2, சிற்றாறு 2- 43, களியல்- 25.4, கன்னிமார்- 41.2, கொட்டாரம்- 127, குழித்துறை- 6, மயிலாடி 27.2, நாகர்கோவில்- 26, பேச்சிப்பாறை 28.2, பெருஞ்சாணி- 9.6, புத்தன் அணை- 9, சுருளோடு- 15.6, தக்கலை- 8.6, குளச்சல்- 6.8, இரணியல்- 13.4, ஆரல்வாய்மொழி 11.4, பாலமோர் 9.6.

Next Story