பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்கக்கோரி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்கக்கோரி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 6:58 PM GMT)

பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்கக்கோரி திருவாரூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பொதுவினியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்க கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகிகள் வெங்கட்ராமன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார்.

நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

பணிவரன் முறை

பணிவரன்முறை செய்திடாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி பணிவரன் முறை செய்ய வேண்டும், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்பந்திக்க கூடாது. 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் சுவாமிநாதன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில பொதுச்செயலாளர் வேலாயுதம் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஹரி நன்றி கூறினார்.


Next Story