நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் சிவகங்கை பூங்கா எதிரில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் சிவகங்கை பூங்கா எதிரில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ரேஷன்கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கபிரபாகரன், செயலாளர் தரும.கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Tags :
Next Story