தஞ்சை பெரியகோவிலில் ரூ.5¾ லட்சம் உண்டியல் காணிக்கை
தஞ்சை பெரியகோவிலில் ரூ.5¾ லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், வராகி அம்மன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, கருவூரார் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப் படுவது வழக்கம்.
ரூ.5¾ லட்சம் காணிக்கை
அதன்படி நேற்று உண்டியல்கள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டு அம்மன் சன்னதிக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சீல் உடைக்கப்பட்டு உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் கவியரசு, மேற்பார்வையாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 2 கிடைத்தது. மேலும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 12-ம் கிடைத்தன.

Related Tags :
Next Story