மாவட்ட செய்திகள்

கிரு‌‌ஷ்ணகிரியில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Rashankadai employees demonstrate in Krishnagiri

கிரு‌‌ஷ்ணகிரியில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிரு‌‌ஷ்ணகிரியில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிரு‌‌ஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழ்நாடு அரசு ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாநில துணைத் தலைவர் சோமேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகே‌‌ஷ் வரவேற்று பேசினார்.


மாவட்ட இணை செயலாளர் நித்தியானந்தன், மாவட்ட துணைத் தலைவர்கள் மக்தும்கான், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் கிரு‌‌ஷ்ணன், மாவட்ட தலைவர் உமாசங்கர், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் பாலசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான பணிக்கு, ரே‌‌ஷன்கடை பணியாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும், நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு 35 ஆயிரம் ரூபாயும் வழங்கும் ஊதிய வித்தியாசத்தை சமன்படுத்த வேண்டும். உணவு பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதம் 30-ந் தேதி அன்று சம்பளம் வழங்க ஆணையிட்டும் சில சங்கங்கள் வழங்குவதில்லை. சம்பள குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தேசிய தொலை தொடர்பு சம்மேளம், எஸ்.என்.இ.ஏ., ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. ஆகிய சங்கங்கள் சார்பில் வேலூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
5. புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்.