வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 9:29 PM GMT)

வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெண்ணந்தூரில் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வெண்ணந்தூர் கிளையினையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்கான வசதிகளையும், இரும்புப் பெட்டகம் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்தும் டெபாசிட் செய்துள்ள தொகை குறித்தும் நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் வங்கி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தரைப்பாலம்

பின்னர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சி தச்சன்காடு ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள தரைப்பாலத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நாமக்கல் சப்-கலெக்டர் (பொறுப்பு) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமே‌‌ஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் உ‌ஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story