வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது
வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் புலித்தேவன் நகர் பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில், அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர்கள் ஆனந்தன், குணசேகரன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று அந்த குடிசை வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வீட்டில் 3 பெரிய பிளாஸ்டிக் கேன்களில் பதப்படுத்தப்பட்ட சுமார் 150 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர், அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக ராமேசுவரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 37), சக்திவேல் (35), முருகையா (61) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர், “இலங்கைக்கு கடத்துவதற்காக அந்த கடல் அட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும்” என தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.

Related Tags :
Next Story