மு.க.ஸ்டாலின் கருத்துக்கு கவர்னர் கிரண்பெடி மறுப்பு
மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பெடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது ஏனாம் அருகில் உள்ள தீவினை ஆந்திராவுக்கு தாரை வார்க்க கவர்னர் கிரண்பெடி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டிற்கு கவர்னர் கிரண்பெடி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:-
மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின்போது சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக உண்மையை விசாரித்திருக்கவேண்டும். அங்கு மேம்பாடு என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story