மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு + "||" + Honey rubs on tongue of AIADMK volunteers; On MK Stalin Anbazhagan Unsure

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு
அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் மு.க. ஸ்டாலின் தேன் தடவுகிறார் என்று அன்பழகன் எம். எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களுடன் சேர்ந்துதான் காங்கிரசார் வாக்குசேகரித்து வருகின்றனர். அவர்களை ராஜீவ்காந்தியின் ஆன்மாகூட மன்னிக்காது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை குறைகூறி கட்சி நடத்தினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இப்போது அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்.


புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்து இருப்பார்களா? புதுவையின் முதல்-அமைச்சராக தகுதிபெற்றவர் ரங்கசாமிதான். விபத்தில் முதல்-அமைச்சர் ஆனவர் நாராயணசாமி. இது புதுவைக்கு இருண்ட காலம்.

புதுவை மாநிலத்தில் திருட்டு லாட்டரி விற்பனைக்கு ஏஜெண்டு யார்? ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு இந்த திருட்டு லாட்டரி விற்பனை ஆகிறது. இப்போது அந்த கும்பல் ஆன்லைன் லாட்டரிக்கு சென்றுவிட்டது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை; அதனை ஸ்டாலின் நிரப்பி விட்டார் -வைகோ
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டார் என வைகோ தெரிவித்து உள்ளார்.
2. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்காமல் இருக்க வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
3. திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும்.
4. முரசொலி நிலம் - உண்மையை நிரூபிப்பேன்: திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்
திமுகவுக்கு சொந்தமான முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலமென்று புகார் எழுந்த நிலையில், அதிகாரம் படைத்த ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்கள் வழங்கி அதன் உண்மை தன்மையை நிரூபிக்கப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.