சேலத்தில் 6 இடங்களில் இலவச வை-பை வசதி - ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்


சேலத்தில் 6 இடங்களில் இலவச வை-பை வசதி - ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:10 PM GMT (Updated: 18 Oct 2019 11:10 PM GMT)

சேலத்தில் 6 இடங்களில் இலவச வை-பை வசதியினை ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மந்த்ரா வை-பை டெக் இந்தியா என்ற நிறுவனம் ஆகியவை சார்பில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுஇடங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச வை-பை வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், சூரமங்கலம் உழவர் சந்தை, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்களில் இலவச வை-பை வசதி அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை தொடக்கவிழா அம்மாபேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமைவெளி பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு வை-பை வசதியை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘மாநகர பகுதிகளில் செயல்படும் இந்த இலவச வை-பை வசதியை அரசு மற்றும் மாநகராட்சி இணையதளம் உள்ளிட்ட பொதுத்தளங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடையின்றி பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இணையதள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கண்காணிப்பதற்கு மாநகராட்சி அலுவலகவத்தில் தனி கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் திலகா, தமிழ்செல்வன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story