பணம் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது


பணம் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 4:15 AM IST (Updated: 20 Oct 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். பணம் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள கெருகம்பாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செல்வச்சந்திரன்(வயது 36). இவர், அண்ணாநகர் மேற்கு, 17-வது பிரதான சாலையில் தனது கூட்டாளிகளான சிவகுமார், பாபி, ரவிகுமார் ஆகியோருடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றை நடத்தினார். அதில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு செய்து தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பி பலர் அவர்களிடம் முதலீடு செய்தனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள், திருமங்கலம் போலீசில் புகார் அளித்து இருந்தனர். இதுபற்றி திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படைகள் அமைத்து மோசடி ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பணம் மோசடியில் ஈடுபட்ட செல்வச்சந்திரன், வெளிநாடு தப்பிச்செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவரை திருமங்கலம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் சிவகுமார், பாபி, ரவிகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story