வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை


வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2019 5:44 AM IST (Updated: 20 Oct 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஒர்லி தொகுதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. தகுந்த ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை ஒர்லியில் சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாகனம் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் ரூ.4 கோடி இருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும், வங்கியில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு கொண்டுசெல்லும் வழியில் பிடிபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திருப்பி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட ஒர்லி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Next Story