மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி அருகே, லாரி மோதி ஓட்டல் மேலாளர் சாவு + "||" + Near Vikravandi, Lorry collision hotel manager dies

விக்கிரவாண்டி அருகே, லாரி மோதி ஓட்டல் மேலாளர் சாவு

விக்கிரவாண்டி அருகே, லாரி மோதி ஓட்டல் மேலாளர் சாவு
விக்கிரவாண்டி அருகே லாரி மோதி ஓட்டல் மேலாளர் இறந்தார்.
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவிராயன் மகன் பாரதிதாசன் (வயது 29). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து கயத்தூருக்கு புறப்பட்டார்.

விக்கிரவாண்டி அருகே குச்சிப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி, அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான பாரதிதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (28) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்: தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2. சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. விபத்து எதிரொலி: கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில் மாற்றம்
விபத்து சம்பவம் எதிரொலியாக, கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
5. வீட்டுக்குள் லாரி புகுந்தது; சுவர் இடிந்து 2 பெண்கள் படுகாயம்
பெரும்பாலை அருகேவீட்டுக் குள் லாரி புகுந்தது. சுவர் இடிந்து 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.