மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாததால் விரக்தி பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு + "||" + To the driver who killed his mother Life sentence Madras Womens Court order

திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாததால் விரக்தி பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாததால் விரக்தி பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாத விரக்தியில், பெற்ற தாயை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சென்னை,

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (வயது 40), கார் டிரைவர். இவர் தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி பணம் கேட்டு தனது தாயாரை தொந்தரவு செய்துள்ளார்.


மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி வந்துள்ளார். ஆனால் சசிகலா, திருமணத்துக்கு ஏற்பாடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, “நீ செத்து ஒழிந்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும்” என்று கூறி அமர்நாத் தனது தாயாரை கத்தியால் குத்தினார். பின்னர், சசிகலா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், சசிகலா இறந்து போனார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமர்நாத் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை
ராயக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு
சிதம்பரம் அருகே கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. தொழிலாளியை சுட்டுக்கொன்ற செம்மரக் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை
வனத்துறையினரிடம் காட்டிக் கொடுப்பதாக மிரட்டிய கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த செம்மரக்கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4. 3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்: நகைக்காக பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பரமத்தி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே 3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
5. சொத்து தகராறில் தம்பியை கொன்றவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்தவருக்கும், அவரது மகனுக்கும் சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.