தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:00 PM GMT (Updated: 22 Oct 2019 4:24 PM GMT)

பெரியாறு கால்வாயில் மாவட்டத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடாததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

மாவட்டத்தில் பெரியார் கால்வாயில் வரும் தண்ணீர் மூலம் நேரடி ஆயக்கட்டு பகுதியாக ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய், 48-வது மடைக்கால்வாய், கட்டாணிப்பட்டி 1-2 ஆகிய பகுதிகளுக்கு 127 கண்மாய்களில் இருந்து தண்ணீர் கிடைக்கும். இதன்மூலம் 6 ஆயிரத்து 39 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

இந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிட கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி தண்ணீர் திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் இதுவரை கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து இந்த பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்திக்க முற்பட்ட போது உரிய முறையில் அவர்களுக்கு பதில் அளிக்கவில்லையாம்.

இதையடுத்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story