திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்; ரூ.1000 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று ரூ.1000 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
திருப்பூர்,
பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகளை இணைக்கக்கூடாது. 11-வது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவை சார்பில் நேற்று காலை ஆந்திரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிபாபு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் எழுத்தர் வரை உள்ள ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 440 வங்கி கிளைகள் உள்ளன. திருப்பூரில் 133 வங்கி கிளைகள் உள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய 2 வங்கிகளை தவிர்த்து மற்ற பொதுத்துறை வங்கிகளில் உள்ள மேற்கண்ட சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று பங்கேற்றார்கள். மாவட்டம் முழுவதும் 1,500 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகள் செயல்பட் டன. அதிகாரிகள் நிலையில் உள்ளவர்கள் வங்கியில் பணியாற்றியபோதும், எழுத்தர்கள், கடைநிலை ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் காசோலை பரிவர்த்தனை, பண பரிவர்த்தனை உள்ளிட்டவை முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story