சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்றபோது மாயம்: மணப்பாடு, கூட்டப்புளி மீனவர்கள் 3 பேரை மீட்க கோரிக்கை
சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடிக்க சென்றபோது, மாயமான மணப்பாடு, கூட்டப்புளி மீனவர்கள் 3 பேரை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம்,
சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடிக்க சென்றபோது, மாயமான மணப்பாடு, கூட்டப்புளி மீனவர்கள் 3 பேரை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்தவர்கள் அந்தோணி மகன் பிரதீப், இருதயராஜ் மகன் கிரீட்வின். நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர் ஹென்றி மகன் இருதயராஜ். மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடிக்கும் வேலைக்கு சென்றனர். இவர்கள் அந்த நாட்டில் டரின் என்ற பகுதியில் தங்கியிருந்து, விசைப்படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால், 5 நாட்களுக்குள் கரைக்கு திரும்புவது வழக்கம்.
மீட்டுத்தர கோரிக்கை
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களும் இதுவரையிலும் கரைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அங்குள்ள மீனவர்கள், பிரதீப்பின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரதீப்பின் மனைவி ரீமன்சியா, சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடிக்க சென்று மாயமான தன்னுடைய கணவர் உள்பட 3 மீனவர்களையும் மீட்க கோரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
Related Tags :
Next Story