கோவில்பட்டியில் ரூ.39 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவியர் விடுதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


கோவில்பட்டியில் ரூ.39 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவியர் விடுதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 8:59 PM GMT)

கோவில்பட்டியில் ரூ.39 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவியர் விடுதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ரூ.39 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவியர் விடுதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

மாணவியர் விடுதி திறப்பு விழா

கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் 155 மாணவிகள் தங்கியிருந்து, பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் ரூ.16 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டது. மேலும் விடுதியில் ரூ.23 லட்சம் செலவில் நவீன நூலகம், உணவகம் அமைக்கப்பட்டு, இரட்டை அடுக்கு கட்டில்கள், மேஜை, நாற்காலிகள் போன்றவை வழங்கப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட மாணவியர் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விடுதியை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

கோவில்பட்டி அருகே விஜயாபுரி அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.26 லட்சம் செலவில் காம்பவுண்டு சுவர், சர்வீஸ் ரோடு மற்றும் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய காம்பவுண்டு சுவர், சர்வீஸ் ரோடு ஆகியவற்றை திறந்து வைத்து, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், கோவில்பட்டி நகர பொது கூட்டுறவு சங்கத்தில் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை வழங்கினார்.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் ரத்தினராஜா, துணை தலைவர் செண்பகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story