பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி 6 கிராம விவசாயிகள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
கடந்த 2017-18ம் ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி 6 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
கமுதி அருகே உள்ள அச்சங்குளம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கமுதி தாலுகா, அச்சங்குளம் குரூப்பில் உள்ள காட நகரி, விரதக்குளம், அந்திரியேந்தல், முத்தனேரி, வேப்பங்குறிச்சி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 2017-18ம் ஆண்டுக்கு டி.புனவாசல் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளோம்.
இந்த நிலையில் அருகில் உள்ள கிராமங்களில் வேறு கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்தவர்களுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், டி. புனவாசல் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த அச்சங்குளம் குரூப் விவசாயிகளான எங்களுக்கு மட்டும் பயிர் இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்பட வில்லை.
சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலத்திற்குரிய பயிர் இழப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்ட நாங்கள் கடனை செலுத்த முடியாமலும், வட்டி கட்ட முடியாமலும் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளோம். இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story