கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு
கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்,
தமிழக அரசு உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பிரிவு, தீவிர காய்ச்சல் பிரிவு, காய்ச்சலுக்கு பின் கண்காணிப்பு பிரிவு என காய்ச்சல் நோயாளிகளுக்கு 3 வகையான சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், காய்ச்சல் பாதிப்பின்போது ரத்த தட்டணுக்கள் குறைந்தால் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களது ரத்த தட்டணுக்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை உயர்வது உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் காய்ச்சலுக்கு பின் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 72 மணிநேரம் கண்காணிக்கப்படுகின்றார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் வீட்டிற்கு திரும்ப அனுப்புகின்றனர் எனவும் மேலும் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதற்காக நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது என்றும் கூறினார்.
சிறப்பு மருத்துவ முகாம்
மேலும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம், தங்கள் வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ரத்த தட்டணுக்களை பரிசோதிக்கும் ஆய்வு எந்திரத்தினை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை விவரங்களை கேட்டறிந்தார்.
முன்னதாக இருக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனையோடு, டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களின் தன்மை குறித்து விளக்கமாக அறிவுறுத்துமாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது கபிலர்மலை வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story