டிக்கெட் கவுண்ட்டர்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்க மெட்ரோ ரெயில் பயணத்துக்கு ‘ஸ்மார்ட்’ கைக்கெடிகாரம்
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதை தடுப்பதற்காக ‘ஸ்மார்ட்’ கைக்கெடிகாரம் ஆயிரம் மற்றும் ரூ.1,500 கட்டணத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
சென்னை,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுத்து விரைவாகவும், பாதுகாப்பாகவும், குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக சென்னை சென்டிரல்- பரங்கிமலை மற்றும் விமானநிலையம்- வண்ணாரப்பேட்டை இடையே 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் வரையிலான விரிவாக்கப்பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
மெட்ரோ ரெயில் சேவையை பயணிகள் முறையாக பயன்படுத்தி கொள்வதற்காக மினிபஸ், ஷேர் ஆட்டோ, டாக்சி வசதிகள் மற்றும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் வாடகைக்கு விடும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க எந்திரங்கள் இருந்தாலும், அலுவலக நேரங்களில் சென்டிரல், எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது.
மெட்ரோ ரெயில் விரைவான பயணமாக இருந்தாலும், டிக்கெட் எடுக்க அதிக நேரம் பயணிகள் செலவிட வேண்டி இருக்கிறது. மாதாந்திர பாஸ் உள்பட பல சலுகைகள் இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் அன்றாடம் டிக்கெட் எடுத்து பயணிப்பதை தான் விரும்புகின்றனர். இதனால் தான் டிக்கெட் கவுண்ட்டர்களில் நீண்ட வரிசையில் பயணிகள் நிற்பதை தவிர்ப்பதற்காக ‘ஸ்மார்ட் கைக்கெடிகாரம்’ திட்டத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இந்த கைக்கெடிகாரம் வழங்கும் திட்டத்தை ‘டைட்டன் வாட்ச்’ நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக பிரத்தியேகமாக நவீன ‘சிப்’ பொருத்திய கைக்கெடிகாரத்தை டைட்டன் வாட்ச் நிறுவனம் தயாரித்து மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் வழங்க உள்ளது.
இந்த கைக்கெடிகாரத்தை வாங்கி கையில் கட்டியிருக்கும் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள கருவியில் வாட்சை காண்பித்தால் கதவுகள் தானாக திறக்கும். நேராக சம்பந்தப்பட்ட பிளாட்பாரத்துக்கு சென்று ரெயிலை பிடித்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த கைக்கெடிகாரம் ரூ.1,000 மற்றும் ரூ.1,500 என்ற கட்டணத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘இந்த திட்டம் குறித்து ‘டைட்டன் வாட்ச்’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது ஆரம்பகட்டத்தில் தான் திட்டம் உள்ளது. செயல்வடிவம் பெற்ற பின்னர் தான் இதுகுறித்து முழுமையாக தெரியவரும். தற்போது அதிகாரிகள் மத்தியிலும் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த கைக்கெடிகாரத்தில் இருக்கும் நவீன சிப் மூலம் மாதம் தோறும் பயணத்துக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்யும் முறையும் இருக்கும்’ என்றனர்.

Related Tags :
Next Story