லால்குடி அருகே அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் திடீர் சாவு
லால்குடி அருகே அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.
லால்குடி,
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 47). அரசு பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி லெட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர். நேற்று மதியம் வழக்கம்போல் திருக்குமரன் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
லால்குடியை அடுத்த மாந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற அவர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திண்ணியம் வரை செல்லும் பஸ்சை ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் கண்டக்டராக நாகராஜ் இருந்தார். பின்னர் திண்ணியத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, திருச்சி நோக்கி அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் சில பயணிகள் இருந்தனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடியை தாண்டி பஸ் சென்றபோது திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டரிடம் ‘என்னால் பஸ்சை இயக்க முடியவில்லை, நெஞ்சுவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை, கண்டக்டர் நாகராஜ் உடனடியாக அருகே உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். திருக்குமரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து கார் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கண்டக்டர் நாகராஜ் லால்குடி போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் பூபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த கிளை மேலாளர் மருத்துவமனையில் டாக்டரிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக திருக்குமரனின் மனைவி லெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story